உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட நபரொருவரை பற்றி அறிந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இராணுவ தளபதிக்கு தொலைபேசி மூலம் அழைப்பொன்றை எடுத்து உதவி பெற முயற்சித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதை தடை செய்ய வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

 

இராணுவத் தளபதிக்கு ரிஷார்ட் அழுத்தம் கொடுத்தாரா? இல்லையா?இதோ உண்மைக் கதை

பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கொலன்னாவையில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு செம்பு வழங்கியது குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு மூலம் விசாரணை நடத்தவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தொடர்ந்து விமர்சிப்பதை ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஏப்ரல் 16 முதல் 21 வரை இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விஜயம் செய்தபோது, ​​பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு எந்தவொரு முறையான நியமனத்தையும் வழங்காதது மற்றும் தாக்குதல் குறித்து விழிப்புடன் இருக்காததையிட்டும் ஐ.எஸ் அச்சுறுத்தலுக்கு அவர் வேண்டுமென்றே வழி வகுத்தார் என்றும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி