பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறித்து பேசுவதற்கான வாய்ப்பை தடுத்ததாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றச் சாட்டை முன்வைத்துள்ளன.

கொழும்புக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை அரசாங்க அமைச்சர்கள் முன்னிலையில் சந்தித்தார்.

பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

"அவர் இப்போது நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. அதனால்தான் அவரை பிரதமரும் ஜனாதிபதியும் மட்டுமே சந்தித்து விட்டு அவரை ஹோட்டலில் இருந்து திருப்பி அனுப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது."

Imran khan Mahinda

 எதிர்க்கட்சி நா.உ. முஜிபுர் ரஹ்மான் பெப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகம் முன் இந்த கருத்துக்களை தெரிவித்தார்,கொவிட் 19 தொற்றுநோயால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கத்திற்கு அனுமதி கோரி நூற்றுக்கணக்கானவர்கள் பாகிஸ்தான் பிரதமரின் வரவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தலைநகரில் நடந்த போராட்டம் கட்டாய தகனத்திற்கு எதிரான தேசிய இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகளைத் தவிர, தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

153851434 3253324641434751 278380220663375720 n

கொரோனாதொற்றால் மரணிக்கும் இலங்கை முஸ்லிம்களை அடக்கம் செய்ய இலங்கை அரசு அனுமதிக்காது ஏன் என்பதை mujiberRபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிந்திருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், நாட்டின் சமூக ஆர்வலர்களும் முஸ்லிம்களின் அடக்கம் உரிமைகளை உறுதிப்படுத்த தலையீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

கொழும்பில் நடந்த போராட்டத்தின் போது ஊடகங்களிடம் பேசிய நா.உ. மனோ கணேசன், ராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையும், உள்நாட்டுக் கொள்கையும் தோல்வியடைந்துள்ளதாக வலியுறுத்தினார்.

'தோல்வி

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்தபோது பாகிஸ்தான் பிரதமருக்கு அரசாங்கம் அனுப்பிய செய்தியை அவர் கேள்வி எழுப்பினார்.

 "இம்ரான் கானுக்கு என்ன செய்தி? பாகிஸ்தான் மக்களுக்கு என்ன செய்தி? இஸ்லாமிய மக்களுக்கு என்ன செய்தி? உலகிற்கு என்ன செய்தி? எனவே, இந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைகிறது. உள்நாட்டு கொள்கையும் தோல்வியடைகிறது. அரசாங்கமும் தோல்வியடைகிறது.

இரு பிரதமர்கள் சந்தித்த காட்சிகள் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தாலும், இரு தரப்பினரும் முஸ்லிம்களின் அடக்கம் உரிமைகள் குறித்து எதுவும் கூறவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி