இந்த நாட்டின் இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.எனது மகன் விமுக்தியும் அந்த போராட்டத்தில் இருப்பார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

' LADY LEADER ' சமூக ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விமுக்தி பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் நுழைகிறாரா என்று கேட்டபோது, ​​முன்னாள் ஜனாதிபதி அரசியலை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அனுப்பும் பாரம்பரியத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசியலில் திருடும் தற்போதைய அரசியல் பாரம்பரியத்தை மாற்றி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், தங்கள் பிள்ளைகளை தற்போதைய அரசியல் புதைகுழிக்குள் தள்ளிவிடுவதை தவிர்த்து உண்மையாக விருப்பம் உள்ள திறமையான இளைஞர்களிடம் நாட்டை ஒப்படைக்க விரும்புவதாகவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனது மகன் விமுக்தியும் நாட்டை கட்டமைக்கும் இளைஞர் படையை ஆதரிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல என்று கூறியதுடன்  இதுவரை வெளிவராத பல உண்மைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி