ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் பசிந்து ஹிருசானை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 5 மாணவர்கள் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சில்லை பயன்படுத்தி விபத்தை ஏற்படுத்திய மாணவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தை எதிர்நோக்கிய பசிந்து ஹிருசான் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் பசிந்து ஹிருசான் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தார்.

பசிந்து ஹிருசானின் தலைப் பகுதியில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் அவருக்கு இதுவரை சுயநினைவு திரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் மிரிஹான பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று விபத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைதான மாணவர்களை இன்று (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாணவனுக்கு சிகிச்சை அளிக்க, தேவைப்படின் ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தை பகிடிவதை என பிழையாக சிலர் அர்த்தப்படுத்தி வருவதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியின் நடவடிக்கையால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒழுக்காற்று குழு உறுப்பினர் பாடக்க குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதை தடுக்க பல்கலைக்கழகங்களில் சிவில் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி