இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
2025 மே மாதத்தில் இந்த பெறுமதி 6,286 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, கடந்த ஜூன் மாதத்தினுள் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 3.3 சதவீதத்தால் அதாவது 206 மில்லியன் அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.
விசேடமாக, அந்நிய செலாவணி இருப்பு 6,231 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 6,023 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.