இலங்கையில் பதிவான முதல் கொரோனா அலைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் கால் பாகுதிக்கும் குறைவானவர்களே சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 72,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15,908 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,717 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நாடு ஓரளவு மூடப்பட்டிருக்கும் நேரத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சட்ட மீறல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி நிஹால் தல்துவ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு மீறல்களைக் கண்காணிக்க மேல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்தம் 283 காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதன்போது 735 வாகனங்கள் மற்றும் 1,130 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

596 வாகனங்கள் மற்றும் 892 நபர்கள் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியதோடு அவர்கள் சோதனைக்கு உட்படுப்பத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திற்குள் நுழையும் 792 வாகனங்கள் மற்றும் 1160 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். அதிகாரிகள் 198 வாகனங்கள் மற்றும் முறையான அனுமதியின்றி வந்த 303 நபர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். 

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி