நாடு முழுவதும் பரவி வரும் கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்ட நிலையில் வீதி விபத்துகளில் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட ஓகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 13 வரை, வீதியில் காணப்படும் நெரிசலற்ற நிலைமையை தவறாகப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் மூலமாக 63 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துகளில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்துகளுக்கு கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமை மற்றும் 56 விபத்துக்கள் கவனக்குறைவாக  கார் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தியமையால் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்தில் உயிரிழந்த 66 பேரில் 31 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி