1200 x 80 DMirror

 
 

தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடவைத்து சர்ச்சைக்குள்ளான லொஹான் ரத்வத்த சற்று முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னதாக, இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு லொஹான் ரத்வத்தவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.

இத்தாலியிலிருந்து லொஹான் ரத்வத்தவை தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.

அத்துடன் விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பணித்துள்ள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் அன்று சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகள் இருவரை முழந்தாளிட வைத்து, துப்பாக்கியை எடுத்து மிரட்​டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி