நாட்டு மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்களே சிந்தித்து பாருங்கள். மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளைப் பெறுவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். இன்று குடிக்க பால் மா இல்லை. சமைக்க அரிசி இல்லை. விவசாயிகளுக்கான உரம் இல்லை.

மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. எந்த நம்பிக்கையில் இப்படியான ஆட்சியாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குகிறார்கள். ஆட்சிக்கு வரும் போது என்ன கூறினார்கள்.

தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம். நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம். இலவசமாக பலதையும் தருகிறோம் என்று கூறி இனவாதத்தை தோற்றிவித்து ஆட்சியை கைப்பற்றினார்கள்.

இன்று என்ன நடக்கிறது. உண்மையில் இந்த நாடு பெரிய பாதகமான அழிவை நோக்கி செல்கிறது. இப்படியாக நாடு பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இந்த நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும்.

எதிர்வரும் எமது ஆட்சியில் எமது மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் தயாராகி வருகின்றோம். இலங்கை ஒரு அபிவிருத்தி பாதையில் செல்ல நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த 70 வருடமாக எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் இருந்து அரசாங்கத்தை விமர்சித்து கொண்டிருந்தது. ஆனால் நாம் அதை மாற்றியமைத்து இருகின்றோம். எதிர்கட்சியாக இருந்தாலும் மக்களது தேவையறிந்து மக்களிடத்தில் செல்கின்றோம்.

கடந்த 30 வருடகால யுத்தத்தில் வடக்கு – கிழக்கு அதிகமாக பாதிப்படைந்திருந்தது. யுத்தம் முடிவடைந்த பின் அந்த பிரதேசம் பாதிப்படைந்திருந்தது. அதனை நாம் கட்டியெழுப்ப வேண்டும். முடிந்தால் அரசாங்கம் கட்டியெழுப்ப வேண்டும். அல்லது சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும். ருவெண்டா நாட்டில் யுத்தம் நடந்தது.

8 இலட்சம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. யுத்தம் முடிந்த பின் அந்த நாடு கட்டியெழுப்பப்பட்டது. ஆப்கானிஸ்தானிலும் அவ்வாறே நடந்தது. இன்று சர்வதேசத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் வடக்கு – கிழக்கு கட்டியெழுப்பப்படவில்லை. வெறும் வாய் பேச்சில் இருக்கிறார்கள். எமது அரசாங்கத்தின் ஆட்சி வரும் போது யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கு பகுதியை கட்டியெழுப்புவோம்.

எம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அரைகுறையாக இருப்பதாக சிலர் எம்மிடம் கேட்கிறார்கள். கடந்த தேர்தலில் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன்னொருவருக்கு தான் அதிகபடியான வாக்குகளை வழங்கி ஆட்சிக் கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்கள் இந்த நாட்டுக்காக அந்த மக்களுக்காக வீட்டை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. வஞ்சகத் தனம் காணப்பட்டது. எனவே இவர்கள் இந்த நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சி மலரும் போது வீட்டுதிட்ட கனவு நனவாகும்.

மக்கள் எதிர்பார்ப்புடன் வாக்களித்ததார்கள். அதை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இதனை மக்கள் புரிந்து கொண்டு இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி