செய்திகள்
Showing page 922 of 1201 (18,014 articles)

ஞானசார தேரர் பள்ளிவாசல் விஜயம் : முஸ்லிம் தரப்புக்களுக்கிடையில் முறுகல்
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் வேறு இனத்தை செந்தவர்களை அழைத்து பள்ளிவாசலில் வழிபாடுகளை நடத்தியதற்கு எதிராக முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

கம்மன்பில என்ன செய்யப் போகிறார்?
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு!
கட்டாய தடுப்பூசி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவா நகரம் நிலை குலைந்து போய் உள்ளது.

அதள பாதாளத்தை நோக்கி செல்லும் நாடு
அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

பௌத்தம் மற்றும் பௌத்த மரபு குறித்த சர்வதேச வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கல்
பௌத்தம் மற்றும் பௌத்த மரபு குறித்த சர்வதேச வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கல்

மஹர சிறைச்சாலை படுகொலை, மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
நாடளாவிய ரீதியில் கொடிய தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த வேளையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஒரு வருடத்திற்கு பின்னர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளை நம்பி இருக்கும் இலங்கை
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து புலம்பெயர் தமிழர் பிரசாரம்!
இலங்கையில் இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சரிவை சந்தித்த Facebook! பணக்காரர் பட்டியலில் கீழிறங்கினார் மார்க் சக்கர்பெர்க்!
டிக்டாக் யூடியூப் போன்றவற்றின் வளர்ச்சியால் ஃபேஸ்புக்கின் வருமானம் குறைந்துள்ளதை தொடர்ந்து, மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலத்தில் கரிநாள் பேரணி : புலனாய்வுத் துறை தீவிரம்
இலங்கை சுதந்திர தினனத்தை தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான போராட்டம் செல்வபுரத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்தப் போராட்டம் செப்டம்பர் 4ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளரைக் கட்டுப்படுத்த உளவுத்துறை களத்தில்!
பொய்யான தகவல்களை வழங்கி, கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற பொலிசார் முயற்சித்துள்ளனர்.

நீதியமைச்சருக்கு எதிராக போர்க் கொடித் தூக்கும் தொழிலாளர் தலைமை!
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்த எதேச்சாதிகாரக் கூற்றைக் கண்டித்துள்ள, தேசிய

இந்த அரசு தன்னைசூழ இராணுவத்தை வைத்துக்கொண்டுள்ளது! வேலுகுமார்
” இது வெத்து வேட்டு அரசு. வேலைத்திட்டங்கள் எதுவும் அற்ற வெற்று அரசு. எதற்கெடுத்தாலும் ‘சதி’….’சதி’ யென ‘சதி’ புராணம்பாடும் கோமாளி அரசு.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

அனைத்து அரசியல்கைதிகளையும் விடுவிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! செல்வராஜா கஜேந்திரன்
ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்கிறது. இதனை உணர்ந்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குக! கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்
குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் குறித்த ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.

