Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளை நம்பி இருக்கும் இலங்கை

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2022 • 5:22 AM

உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளை நம்பி இருக்கும் இலங்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கமைய இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரையும் அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலரையும் கடனாக பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • அத்துடன் குறித்த இறக்குமதிகள் 6 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
  • இந்த கடன் உதவிகளை தவணை அடிப்படையில் மீள செலுத்துவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

 

இதற்கமைய இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரையும் அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலரையும் கடனாக பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி, பருப்பு மற்றும் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களை இந்த கடன் உதவிகளின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த இறக்குமதிகள் 6 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் கடன் உதவியின் கீழ் கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இந்த கடன் உதவிகளை தவணை அடிப்படையில் மீள செலுத்துவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பினை பதப்படுத்துவதற்கான தொழிற்சாலை ஒன்றினை நிர்மாணிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையை கொழும்பு அல்லது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை அண்மித்து நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...