Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மஹர சிறைச்சாலை படுகொலை, மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2022 • 5:25 AM

மஹர சிறைச்சாலை படுகொலை, மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2020 ஆகிய திகதிகளில் மஹார சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 11 கைதிகளை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் புதன்கிழமை (02) கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணை்ககுழுவின் தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
  • மஹர சிறைச்சாலை படுகொலையை நேரில் கண்ட சாட்சிகளை சிறைச்சாலை நிர்வாகம் சித்திரவதை செய்து சிறைச்சாலைக்குள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கைதிகள் குழுவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மஹர சிறைக்கு மாற்றியதன் மூலம் மஹர சிறைச்சாலையில் போராட்டம் தூண்டப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு டிசம்பர் 2020 இல் தெரிவித்திருந்தது.
எழுத்து அளவு:

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2020 ஆகிய திகதிகளில் மஹார சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 11 கைதிகளை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் புதன்கிழமை (02) கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணை்ககுழுவின் தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

அங்கு பல சிறை அதிகாரிகளையும் பார்த்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த பின்னர் வெளியில் வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர், ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்குவதால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

மஹர சிறைச்சாலை படுகொலையை நேரில் கண்ட சாட்சிகளை சிறைச்சாலை நிர்வாகம் சித்திரவதை செய்து சிறைச்சாலைக்குள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கைதிகள் குழுவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மஹர சிறைக்கு மாற்றியதன் மூலம் மஹர சிறைச்சாலையில் போராட்டம் தூண்டப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு டிசம்பர் 2020 இல் தெரிவித்திருந்தது.

கைதிகளின் போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலுக்கு நெரிசல் உள்ளிட்ட மூன்று முக்கிய விடயங்கள் காரணமாக அமைந்திருந்ததாக ஆணைக்குழுவின் அப்போதைய தீர்மானம் அமைந்திருந்தது.

11 பேரைக் கொன்று 100ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த மஹர சிறைப் படுகொலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது தற்போது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...