Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அதள பாதாளத்தை நோக்கி செல்லும் நாடு

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2022 • 12:18 PM

அதள பாதாளத்தை நோக்கி செல்லும் நாடு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கும் அமைச்சரவை பத்திரம் இன்று (07) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • அதன்படி, 2022ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்குள் தங்கள் செலவினங்களை நிர்வகிக்கவும், மேலதிக ஏற்பாடுகளுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் எனவும் அமைச்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஒன்றிணைந்த நிதியிலிருந்து எரிபொருள் கொடுப்பனவுகளை பெறும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மாதாந்தம் 5 லீற்றர் அல்லது அதற்கு சமமானதாக குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மின்சார செலவை 10 சதவீதம் குறைக்கும் முறைகள் உருவாக்கப்படும்.
எழுத்து அளவு:

இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கும் அமைச்சரவை பத்திரம் இன்று (07) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 2022ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்குள் தங்கள் செலவினங்களை நிர்வகிக்கவும், மேலதிக ஏற்பாடுகளுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் எனவும் அமைச்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த நிதியிலிருந்து எரிபொருள் கொடுப்பனவுகளை பெறும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மாதாந்தம் 5 லீற்றர் அல்லது அதற்கு சமமானதாக குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மின்சார செலவை 10 சதவீதம் குறைக்கும் முறைகள் உருவாக்கப்படும். மேலும், வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கமைய, ஏற்கனவே உள்ள அலுவலக கட்டிடங்கள் மற்றும் புதிய அலுவலகங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு அரச நிறுவனங்களுக்காக வாகனங்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்படும். நிறுவனங்களின் செயல்பாட்டிற்காக அத்தியாவசிய பணியிடங்களில் வெற்றிடங்களை நிரப்புவதைத் தவிர, ஒருங்கிணைந்த நிதியத்தின் மூலம் நிதியளிக்கப்படும் நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய கட்டடங்களை வாடகைக்கு பெறக்கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஒதுக்கீடு இன்றி பெறப்பட்ட கட்டடங்களுக்கு வாடகை செலுத்துவதற்கு நிதி வழங்க வேண்டாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாக்கள் அரச நிதியைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கக் கூடாது. மேலும், 2022-01-12 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிதிச் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தொலைபேசிச் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...