Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஊடகவியலாளரைக் கட்டுப்படுத்த உளவுத்துறை களத்தில்!

T

The Leader Desk

பிப்ரவரி 6, 2022 • 4:10 AM

ஊடகவியலாளரைக் கட்டுப்படுத்த உளவுத்துறை களத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையின் 74வது சுதந்திர தினத்தன்று ஊடகவியலாளர் புண்யமூர்த்தி சசிகரனின் வீட்டிற்கு பிரதம பரிசோதகர் ஒருவர் சீருடையில் வந்துள்ளார்.
  • மட்டக்களப்பு ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளர் புண்ணிமூர்த்தி சசிகரன், இந்த செய்திகளை அறிக்கையிடுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவை பொலிசார் பெற்றிருந்தனர்.
  • பெப்ரவரி 3, 2021 அன்று பொத்துவிலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்ட P2P என பெயரிடப்பட்ட ஐந்து நாள் தொடர் போராட்டம் தொடர்பில், புண்ணியமூர்த்தி சசிகரன் செய்தி வெளியிடுவதைத் தடுக்கும் வகையில், 12 நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக பொலிஸார் தடை உத்தரவை கோரியுள்ளனர்.
  • https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe.
எழுத்து அளவு:

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தன்று ஊடகவியலாளர் புண்யமூர்த்தி சசிகரனின் வீட்டிற்கு பிரதம பரிசோதகர் ஒருவர் சீருடையில் வந்துள்ளார். அன்று இல்லாத போராட்டம் ஒன்றைக் காண்பித்து, அதற்கு தடையுத்தரவைப் பெற்றுள்ளதாக குறித்த பொலிஸ் அதிகாரி ஊடகவியலாளருக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் 74வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பல அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மகாத்மா காந்தி பூங்கா வரை பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அரசாங்க உளவுத்துறைக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை நீதிமன்றத்திற்கு வழங்கி பொலிசார் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

எனினும், அன்றைய தினம் மாலை வரை மட்டக்களப்பில் அவ்வாறானதொரு போராட்டம் நடத்தப்பட்டதாக தமக்கு தகவல் கிடைக்கவில்லை என மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் இவ்வாறான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டுமென மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளர் புண்ணிமூர்த்தி சசிகரன், இந்த செய்திகளை அறிக்கையிடுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவை பொலிசார் பெற்றிருந்தனர்.

பெப்ரவரி 3, 2021 அன்று பொத்துவிலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்ட P2P என பெயரிடப்பட்ட ஐந்து நாள் தொடர் போராட்டம் தொடர்பில், புண்ணியமூர்த்தி சசிகரன் செய்தி வெளியிடுவதைத் தடுக்கும் வகையில், 12 நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக பொலிஸார் தடை உத்தரவை கோரியுள்ளனர்.

அத்துடன், ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் கடந்த காலங்களில் பல தடவைகள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஊடகவியலாளர் அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதை வன்மையாகக் கண்டித்திருந்தது.

புலனாய்வுப் பிரிவினர் ஊடகவியாளரைக் கண்காணித்து, பொலிசாருக்கு வழங்கும் தகவல்களுக்கிடைய இந்தத் தடைகள் பெறப்படுவதாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...