செய்திகள்
Showing page 895 of 1202 (18,027 articles)

''அரசியலமைப்பு எவ்வாறு மாற்றப்பட்டாலும், அதிகாரப் பரவலாக்கம் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும் - டக்ளஸ்
''அரசியலமைப்பு எவ்வாறு மாற்றப்பட்டாலும், அதிகாரப் பரவலாக்கம் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும். ” என மீன்பிடி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனநாயக போராட்டகாரர்களை துன்புறுத்தாதிருக்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை!
இலங்கை அரசாங்கம் நிதியுதவி வழங்கும் போது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என மலையகத்தில் உள்ள அரசியல் கட்சியொன்று சர்வதேச சமூகத்திடம் யோசனை முன்வைத்துள்ளது.

21வது அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
19வது மற்றும் 20வது திருத்தங்களில் இருந்து சாதகமான அம்சங்களின் அடிப்படையில் 21வது அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் இதய நோய்களின் எண்ணிக்கை!
மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணியாக இதுவரை, சமூக ஊடகம், குடும்ப நிலைமை உள்ளிட்ட முக்கிய காரணிகள் இருந்து வந்த நிலையில் இன்று அவை அனைத்தையும் மிஞ்சும் அளவில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தாக்கம் செலுத்தியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 எம்.பிக்கள் ஆதரவு!
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 120 எம்.பிக்களை திரட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்பன்பில் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் - மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி பதில்!
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் எனவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

17 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் - வெற்றியை நோக்கி நகரும் பேரணிகள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் 17 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே பொலிஸார் செயற்பட வேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம்
அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு ஆதரவான கையெழுத்து வேட்டையில் பசில் தோல்வி!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவுவதில் IMF சாதகமான பதில்!
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கோரிக்கை குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கடன் வழங்கும் திட்டத்திற்கான "பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை" நடத்தியதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எட்டு முன்னணி வர்த்தக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை!
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்குத் தேவையான ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்குமாறு, நாட்டில் உள்ள எட்டு முன்னணி வர்த்தக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.

இடைக்கால அரசாங்கத்திலும் நானே பிரதமர் - பிடிவாதத்தில் மகிந்த!
இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டுமாயின் அது என் தலைமையிலேயே ஸ்தாபிக்கப்படும். பிறிதொரு தரப்பினரை பிரதமராக்க பெரும்பாலான எம்.பிக்கள் தயாரில்லை.

டலஸ் நீங்கள் இன்னும் மௌனமா? - ரட்டே ரால
நாட்டின் உள்ளே பாரிய மக்கள் போராட்டம் ஒன்று ஏற்பட்டு இருக்கின்றது. அதனை யாரும் மறுக்க முடியாத அளவு எழுச்சி பெற்ற இளைஞர் போராட்டமாகும்.

“நாமும் உணவுக்காக காலி முகத்திடலுக்கு செல்ல நேரிடும்” - ரணில் சபையில் தெரிவிப்பு
காலி முகத்திடலுக்கு சென்று உணவு உட்கொள்ள மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் உணவுக்காக காலி முகத்திடலுக்கு சென்று நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.

'அரசாங்கத்தின் பெரும்பான்மை இழந்தது- பிரதமர் பதவி விலக வேண்டும்'! - டலஸ்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பாவி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் பதவி விலகுமாறு முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார்.

