Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

“நாமும் உணவுக்காக காலி முகத்திடலுக்கு செல்ல நேரிடும்” - ரணில் சபையில் தெரிவிப்பு

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2022 • 4:20 AM

“நாமும் உணவுக்காக காலி முகத்திடலுக்கு செல்ல நேரிடும்” - ரணில் சபையில் தெரிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • நாம் அரசியலமைப்பினை திருத்தம் செய்வதற்காக கூடியுள்ளோம்.
  • ரம்புக்கனை சம்பவ இடத்திற்கு பிரதி சொலிசிடர் ஜெனரல் சென்றுள்ளமை அவசியமற்றது.
எழுத்து அளவு:


பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரம்புக்கனை சம்பவ இடத்திற்கு பிரதி சொலிசிடர் ஜெனரல் சென்றுள்ளமை அவசியமற்றது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு யார் ஆணை பிறப்பித்தது என்று இதுவரையில் குறிப்பிடப்படவில்லை.

'பி ' அறிக்கை ' எ ' அறிக்கையாக்கப்பட்டுள்ளது. பிறகு பி அறிக்கையில் பெயர் நீக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு பிரயோகத்திற்கான காரணம் பி அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இச்சம்பவத்தில் அவ்வாறு குறிப்பிடப்பிடவில்லை.

ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த லக்‌ஷான் எரிபொருள் பெற்றுக் கொள்ளவதற்காக சென்றே உயிரிழந்தார்.
நாம் அரசியலமைப்பினை திருத்தம் செய்வதற்காக கூடியுள்ளோம். மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண அவதானம் செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றிற்கு குறிப்பிடுங்கள்.

நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் சீனாவுடனான கடன் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகள் கடன் வழங்கும் போது கடன் செலுத்தலுக்கு காலவகாசம் வழங்கும் அல்லது கடன் நிவாரனம் வழங்கும், ஆனால் சீனா அதனின் கடனை திருப்பி செலுத்தலுக்கு கடன் வழங்குகிறது.

எதிர்வரும் மாதம் முதல் எரிபொருள், எரிவாயு பிரச்சினை தோற்றம் பெறும் அப்பிரச்சினை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சம்பிரதாய அரசியல் முறைமையில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே தீர்வு காண முடியும் என்றார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“நாமும் உணவுக்காக காலி முகத்திடலுக்கு செல்ல நேரிடும்” - ரணில் சபையில் தெரிவிப்பு | Tamil Leader | We Lead the Nation