Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இடைக்கால அரசாங்கத்திலும் நானே பிரதமர் - பிடிவாதத்தில் மகிந்த!

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2022 • 3:42 PM

இடைக்கால அரசாங்கத்திலும் நானே பிரதமர் -  பிடிவாதத்தில் மகிந்த!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் தெளிவற்றவர்களே என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுகிறார்கள் என மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
  • இடைக்கால அரசாங்கத்திற்கு சகல தரப்பினரது ஆதரவும் அவசியம். ஒருவேளை இடைக்கால அரசாங்கம் என்றதொன்று ஸ்தாபிக்கப்பட்டால் அது என் தலைமைத்துவத்தில் தான் உருவாக்கப்பட வேண்டும்.
  • அவ ர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ளதைப்போன்று வரலாற்றில் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம்.
எழுத்து அளவு:

அரசியல் தெளிவற்றவர்களே என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுகிறார்கள் என மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ளதைப்போன்று வரலாற்றில்  பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம். பிரச்சினைகளை பொறுமையுடன் கையாள வேண்டும்.

இது தொடர்பில் தெளிவில்லாதவர்கள் தான் என்னை பதவி விலகுமாறு குறிப்பிடுவதாக அறிய முடிகிறது. பதவி விலகுமாறு பெரும்பாலான தரப்பினர் குறிப்பிடவில்லை அத்துடன் என்னிடம் எவரும் அறிவுறுத்தவுவில்லை என பிரதமர் கூறினார்.

கொள்கையற்ற வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது. இடைக்கால அரசாங்கத்திற்கு சகல தரப்பினரது ஆதரவும் அவசியம். ஒருவேளை இடைக்கால அரசாங்கம் என்றதொன்று ஸ்தாபிக்கப்பட்டால் அது என் தலைமைத்துவத்தில் தான் உருவாக்கப்பட வேண்டும்.

 பிறிதொரு தரப்பினரை பிரதமராக்கி அரசாங்கத்தை கொண்டு செல்ல அதிகமான எம்.பிக்கள் தயாரில்லை என்றார்.நாடு இக்கட்டான நிலையில் இருப்பதையும், நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பலம் தற்போதைய அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடு அதிக நெருக்கடிகளை சந்தித்த சந்தர்ப்பங்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறு போச்சுவார்த்தைக்கு வராவிட்டால் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க நேரிடும் எனவும் கூறினார்.

பேச்சுவார்த்தை ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...