Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

''அரசியலமைப்பு எவ்வாறு மாற்றப்பட்டாலும், அதிகாரப் பரவலாக்கம் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும் - டக்ளஸ்

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2022 • 3:21 AM

''அரசியலமைப்பு எவ்வாறு மாற்றப்பட்டாலும், அதிகாரப் பரவலாக்கம் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும் - டக்ளஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • அஸ்ரப் ஆகியோர், சிறுபான்மை தேசிய இனங்களின் நலன்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறந்தது என்ற கருத்தினை வலியுறுத்தியிருந்தனர்.
  • ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் ஆரம்பித்து படிப்படியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக ஈ.பி.டி.பி.
எழுத்து அளவு:

பாராளுமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

"தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக பரவலாகப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக, தமிழ் மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய அமரர் அ. அமிர்தலிங்கம், மலையக மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் முஸ்லீம் மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய மர்ஹீம் எம்.எச்.எம். அஸ்ரப் ஆகியோர்,  சிறுபான்மை தேசிய இனங்களின் நலன்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறந்தது என்ற கருத்தினை வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் தற்போது,  சிறுபான்மை தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் உட்பட பெரும்பாலான  அரசியல் தரப்புக்கள், நிறைவேற்று அதிகார முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து வருகின்றன.

தற்போதைய ஜனாதிபதியும் குறித்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில், ஈ. பி.டி.பி. ஆகிய எம்மைப் பொறுத்தவரையில், அரசியல் அமைப்பில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படினும், தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் ஆரம்பித்து படிப்படியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக ஈ.பி.டி.பி. கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...