Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே பொலிஸார் செயற்பட வேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம்

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2022 • 2:07 AM

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே பொலிஸார் செயற்பட வேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ்மா அதிபர் , பொலிஸார் ஏனைய பாதுகாப்புபடையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே செயற்பட வேண்டும் எனவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  • இந்த பேரணியானது பஞ்சிகாவத்தை, புஞ்சி பொரளை, பொரளை ஊடாக சென்று கெப்பெட்டிபொல வீதி ஊடாக விஜேராம மாவத்தைக்குள் பிரவேசித்ததுடன் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
  • குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் நேற்றைய தினம் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:


பொலிஸ்மா அதிபர் , பொலிஸார் ஏனைய பாதுகாப்புபடையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே செயற்பட வேண்டும் எனவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுமாறு கோரி 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் காலிமுகத்திடலுக்கு செல்லும் பல வீதிகளில் கடினமான வீதித்தடைகள் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். உத்தியோகபூர்வ இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில், சில மாணவர்கள் சுவரில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த பேரணியானது பஞ்சிகாவத்தை, புஞ்சி பொரளை, பொரளை ஊடாக சென்று கெப்பெட்டிபொல வீதி ஊடாக விஜேராம மாவத்தைக்குள் பிரவேசித்ததுடன் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 
இந்த மாணவர்களின் போராட்டத்தை தடுக்க செயற்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் நேற்றைய தினம் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மக்களுக்கு பாரிய காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகின்றமை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

பொலிஸ்மா அதிபர், பொலிஸார் மற்றும் படையினர் எந்தவொரு நிலைமையின் கீழும் எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் உள்ள மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதேனும் வன்முறை சூழல் ஏற்பட்டால் அது நாட்டிற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே பொலிஸார் செயற்பட வேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம் | Tamil Leader | We Lead the Nation