Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் இதய நோய்களின் எண்ணிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2022 • 9:33 AM

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் இதய நோய்களின் எண்ணிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார அழுத்தத்தை பலரால் சமாளிக்க முடியாமல் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • அத்தோடு டொலர் தட்டப்பாடோடு அதிகரிக்கும் நோயாயர் எண்ணிக்கையுடன் தேசிய வை த்தியசாலையில் எதிர்காலத்தில் மருந்துகள் இல்லாமல் போகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்த நிலைமை அதிகரித்த மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை உட்பட மற்ற தொற்று அல்லாத நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.
எழுத்து அளவு:

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார அழுத்தத்தை பலரால் சமாளிக்க முடியாமல் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மன அழுத்தம் அதிகரிப்பு, அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள கடுமையான வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளமையும், சில சமயங்களில் அப்படி காத்திருந்தும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது போவதனால் ஏற்படும் விரக்தியும் மேலும் பொருட்களின் அதிகரிக்கும் விலையும் அதனை கொள்வனவு செய்ய கையில் போதுமான பணமின்மையும் காரணமாகி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலைமை அதிகரித்த மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை உட்பட மற்ற தொற்று அல்லாத நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.

அத்தோடு டொலர் தட்டப்பாடோடு அதிகரிக்கும் நோயாயர் எண்ணிக்கையுடன் தேசிய வைத்தியசாலையில் எதிர்காலத்தில் மருந்துகள் இல்லாமல் போகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது திடீர் மாரடைப்புக்கு சிகிச்சைக்கு சிறியளவிலான மருந்துகளே உள்ளதாகவும், ஆனால் எதிர்காலத்தில் மருந்துகள் முடிவடையும் பட்சத்தில் வைத்தியசாலை ஊழியர்களும் நோயாளர்களும் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் வைத்தியர் ரணசிங்க வலியுறுத்துகின்றார்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...