Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் - மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி பதில்!

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2022 • 6:15 AM

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் - மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி பதில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
  • இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு தாம் அங்கீகாரம் அளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
  • கோப் குழுவின் தற்போதைய தலைவரான பேராசிரியர் சரித ஹேரத், பிரதமரும் அவரது அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பொருளாதார நெருக்கடி தொடர்பாக மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் குறித்த விளக்கமளித்து எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

முன்னதாகவும் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சர்வகட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசு பதவி விலக வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதற்கு கட்சிகள் மறுப்பு வெளியிட்டன. 

எனினும் பதவி விலக போவதில்லை என்ற பகிரங்க அறிவிப்பை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்டிருந்தனர்.

 நாட்டின் பொருளாதநிலைமையை சரிசெய்ய நாட்டின் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவது இன்றியமையாதது அந்த வகையில் தற்போதைய அரசை பதவி விலககோரி பல்வேறுதரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தற்போதைய அரசின் கீழ் நாட்டிற்கு உதவிகளை வழங்குவதையும் சர்வதேசங்கள்  தாமதப்படுத்தியுள்ளன.

 இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு தாம் அங்கீகாரம் அளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு தாம் அங்கீகாரம் அளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் தற்போதைய தலைவரான பேராசிரியர் சரித ஹேரத், பிரதமரும் அவரது அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆறு யோசனைகளை சரித ஹேரத் முன்வைத்துள்ளதுடன், ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் சிறிய, காபந்து அரசாங்கத்தை அமைத்து எட்டு மாதங்களுக்குப் பின்னர் தேர்தலை நடத்துமாறும் பரிந்துரைத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...