Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இலங்கைக்கு உதவுவதில் IMF சாதகமான பதில்!

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2022 • 5:32 PM

இலங்கைக்கு உதவுவதில் IMF சாதகமான பதில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கோரிக்கை குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கடன் வழங்கும் திட்டத்திற்கான "பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை" நடத்தியதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி ஒரு அறிக்கையில், தங்கள் கடனாளிகளுடன் கூட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதிகாரிகளின் திட்டத்தை IMF குழு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கோரிக்கை குறித்து இலங்கை அதிகாரிகளுடன்  கடன் வழங்கும் திட்டத்திற்கான "பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை" நடத்தியதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அதன் சமூக பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதற்கும் தற்போதைய நெருக்கடியின் போது ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கும் இலங்கை "நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை" செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கியதாக நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி ஒரு அறிக்கையில், தங்கள் கடனாளிகளுடன் கூட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதிகாரிகளின் திட்டத்தை IMF குழு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு கடந்த 17 ஆம் திகதி வொசிங்டன் பயணமானார்கள். 

சர்வதேச நாயண நிதியத்துடன் கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் நாளை (24 )வரை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.  

எவ்வாறாயினும், IMF உதவியை பெற்றுக்கொள்வதற்கு பூர்த்தி செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளதால் கடனை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட காலம் செல்லும்” என நேற்று வொசிங்டனில் இருந்து நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கைக்கு உதவுவதில் IMF சாதகமான பதில்! | Tamil Leader | We Lead the Nation