Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
கட்டுரைகள்

HCLTechஉடன் இணையும் MMBL-Pathfinder

T

The Leader Desk

டிசம்பர் 3, 2024 • 1:49 PM

HCLTechஉடன்  இணையும் MMBL-Pathfinder

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் முகமாக MMBL-Pathfinder குழுமமானது உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HCL TechGroup உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.
  • HCLTech பற்றி HCLTech ஆனது 60 நாடுகளில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு தாய் வீடாக உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய பொறியியல் கிளவுட் செயற்கை நுண்ணறிவு போன்ற பாரிய வீச்சு கொண்ட தொழில்நுட்ப அறிவையும் சேவைகளையும் வழங்குகிறது.
  • ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் எங்கள் வருமானம் 13.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். எங்களைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள hcltech.com எனும் இணையதளத்தை பார்வையிடுங்கள்.
எழுத்து அளவு:

தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் முகமாக  MMBL-Pathfinder  குழுமமானது உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான  HCL TechGroup உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. டிஜிட்டல் யுகத்துக்கு திறன் மிக்க தொழிலாளர் படையொன்றை  உருவாக்குவதை முக்கிய நோக்காக கொண்டு அண்மையில்  Pathfinder EdTech Institute தோற்றுவிக்கப்பட்டது. 

பங்குடமையின் முக்கிய அம்சமாக தொழில்துறை தேவைகளுக்கேற்ற கல்வியியல் தகமைகளை தடையின்றி பெறும் வகையில் HCLTech Career Shaper™️ எனும் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  HCLTech இன் விதந்துரைக்கப்பட்ட பயிற்சி முறைகள், நிபுணத்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட பாடவிதானங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் என்பனவற்றுடன் இந்த முன்னோடி திட்டமானது ஒவ்வொரு தனி நபரையும்  வேலைக்கு ஆயத்தமான சாத்தியமான திறன்களைக் கொண்டவராக மாற்ற உதவுகிறது.  

இந்த முன்னோடி நிகழ்ச்சி திட்டத்துக்கு அமைய யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் இரண்டு பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பின்னர் விஸ்தரிக்கப்படும். முதலாவது பாடநெறியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு என்பனவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.  இன்னும் பல விடய தானங்களையும் உள்ளடக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கற்றல் அணுகுமுறையானது தொழில்நுட்ப பாட வேலைகள், பங்கேற்பாளர்களின் நேரடி பங்கேற்பிலான செயற்பாடுகள், உலக பயிற்சி வாய்ப்புகள் என்பனவற்றோடு மாணவர்களுக்கு விரிவான மற்றும் ஆழமான கல்வி அனுபவங்களை வழங்குகிறது.

‘MMBL-Pathfinder  குழுமத்துடனான எங்களது புரிந்துணர்வு ஒப்பந்தமானது நிலை மாற்ற கல்வியின் மூலம் சமூகங்களை அதிகாரம் உள்ளவர்கள் ஆக்கும் HCLTech இன் அர்ப்பணிப்பினை மீள வலியுறுத்துகிறது  Career Shaper™️  இணை இலங்கைக்கு கொண்டு வந்ததன் மூலம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப சந்தைக்கு ஏற்ற வகையில் இலங்கை தகவல் தொழில்நுட்பட்ட தொழில் வாண்மையாளர்களை வடிவமைக்கிறது’  என்றார் HCLTech, EdTech இன் சர்வதேச தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர்.

இந்த முன்னோடி திட்டமானது உயர்தரமான தொழில்நுட்ப அறிவை  உலகெங்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற HCLTech இன்  எண்ணக்கருவுக்கு அமைவாக உள்ளது.  சாத்தியமான தொழில் வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிலைமாறு வேலை படையொன்றை  உருவாக்கும்  முகமாக 59க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னோடி தொழில் நுட்ப நிறுவனமாக உள்ளது.

‘Pathfinder EdTech  நிர்வாகத்தின் இந்த அறிமுகமானது பிராந்தியத்தில் தகவல் தொழில்நுட்ப  புத்தாக்கத்துக்கான கேந்திர நிலையமாக மாறும் இலங்கையின் கனவை மேலும் பலப்படுத்துகிறது. இந்த பங்குடமையானது திறன்மிக்க தொழில்வாண்மையாளர்களை உருவாக்கக் கூடியதாக இருக்கும். டிஜிட்டல் திறன்களில் பிராந்தியத்தின் தலைமை வகிக்கும் ஒரு நாடாக தன்னை மாற்றிக் கொள்ளும் இலங்கையின் கனவுக்கு இது பங்களிக்கின்றது. 

இலங்கையின் திறன்களில் முதலீடு செய்வதன் மூலம் நாங்கள் கல்வியை மாத்திரம் முன்னேற்றவில்லை மாறாக பொருளாதார வளர்ச்சிக்கும் புத்தாக்கத்துக்குமான வாய்ப்புகளை அதிகரிக்கின்றோம் என்றார். MMBL-Pathfinder குழுமத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான பாலசுந்தரம். 2020 ஆம் ஆண்டில் இலங்கை சந்தையில் புகுந்ததில் இருந்து HCLTech பிரசன்னம் ஆனது சாதகமான முறையில் விரிவடைந்து இருக்கிறது.  இந் நிறுவனமானது அதன் பாரிய சேவை நிறுவனத்தை கொழும்பில் உள்ள  The Cinnamon Life வளாகத்தில் நிறுவியுள்ளது. அத்துடன் இலங்கையை பிராந்தியத்தின் தகவல் தொழில்நுட்ப கேந்திர நிலையமாக மாற்றும் வகையில் டிஜிட்டல் பிரயோகங்கள், முறைமை உள்ளடக்கம், உற்பத்தி மேம்பாடு, மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு என்பனவற்றில் கவனம் செலுத்துகிறது.

HCLTech பற்றி

HCLTech ஆனது 60 நாடுகளில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு தாய் வீடாக உள்ளது.  டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய பொறியியல் கிளவுட் செயற்கை  நுண்ணறிவு போன்ற பாரிய வீச்சு கொண்ட தொழில்நுட்ப அறிவையும் சேவைகளையும் வழங்குகிறது. நிதிச் சேவைகள், உற்பத்தி, உயிர் விஞ்ஞானம், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகம், சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் மற்றும் பொதுச்சேவை என எல்லா துறை வாடிக்கையாளர்களுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் எங்கள் வருமானம் 13.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.  எங்களைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள hcltech.com எனும் இணையதளத்தை பார்வையிடுங்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...