Tamil Leader News
முக்கியம்
புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●சாஃப் கிண்ணக் கால்பந்து: இலங்கை - பூடான் போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு!●மான் தாக்கியதில் கைதி உயிரிழப்பு!●உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!●அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●
செய்திகள்

காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!

T

The Leader Desk

அக்டோபர் 26, 2026 • 3:44 AM

காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலநிலை காரணமாக மலையக மற்றும் தாழ்நிலக் காய்கறி வகைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
  • இதற்கமைய, கடந்த வாரம் 350 ரூபாவிற்கும் 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் காணப்பட்ட தக்காளி கிலோவொன்றின் மொத்த விலை 600 ரூபாவிற்கும் 650 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலை வரை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • இதற்கு மேலதிகமாக, 250 ரூபா விலையில் காணப்பட்ட மாலு மிளகாய் (தேசி மிளகாய்) கிலோவொன்றின் விலை 400 ரூபாவிற்கும் 450 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையாக உயர்வடைந்துள்ளதுடன், 150 ரூபாவாகக் காணப்பட்ட கோவா கிலோவொன்றின் மொத்த விலை 350 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.
  • அதன் மொத்த விலை 600 ரூபா போல் ஆகின்றது.
எழுத்து அளவு:

காலநிலை காரணமாக மலையக மற்றும் தாழ்நிலக் காய்கறி வகைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

இதற்கமைய, கடந்த வாரம் 350 ரூபாவிற்கும் 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் காணப்பட்ட தக்காளி கிலோவொன்றின் மொத்த விலை 600 ரூபாவிற்கும் 650 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலை வரை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, 250 ரூபா விலையில் காணப்பட்ட மாலு மிளகாய் (தேசி மிளகாய்) கிலோவொன்றின் விலை 400 ரூபாவிற்கும் 450 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையாக உயர்வடைந்துள்ளதுடன், 150 ரூபாவாகக் காணப்பட்ட கோவா கிலோவொன்றின் மொத்த விலை 350 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் காய்கறி விலைகள் மேலும் உயர்வடையக்கூடும் என மேனிங் சந்தைப் பொதுச் சங்கத்தின் முன்னாள் அமைப்பாளர் அணில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அணில் இந்திரஜித்,

"இத்தினங்களில் காய்கறி விலைகளில் உயர்வொன்று காணப்படுகிறது. அதற்குப் பிரதான காரணம் நாட்டில் நிலவும் காலநிலையாகும். அதிகபட்ச விலையாகத் தக்காளியின் விலை காணப்படுகிறது. அதன் மொத்த விலை 600 ரூபா போல் ஆகின்றது. அதேபோன்று போஞ்சி 400 ரூபாவிற்கும் 500 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் உள்ளது. கரட் 200 ரூபாவிற்கும் 250 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் உள்ளது. லீக்ஸ் 200 ரூபாவாகும். பச்சை மிளகாய் 350 ரூபாவிற்கும் 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் உள்ளது. தாழ்நிலக் காய்கறி விலைகளும் உயர்வடைந்துள்ளன. புடலங்காய் கிலோவொன்று இத்தினங்களில் 400 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று பீர்க்கங்காய் 200 ரூபாவிற்கும் 250 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் உள்ளது. பூசணிக்காய் விலையும் இத்தினங்களில் உயர்வடைந்துள்ளது. கிலோவொன்றின் விலை 200 ரூபாயைக் கடந்துள்ளது. வெள்ளரிக்காய் மற்றும் கெக்கரி போன்ற காய்கறிகள் மட்டுமே 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் உள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் காய்கறி விலைகள் உயர்வடைந்துள்ளன. எவ்வாறு இருப்பினும் டிசம்பர் மாதம் வரும் போது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாகக் காய்கறி விலையில் உயர்வொன்று காணப்படுவது வழமையாகும். எனவே எதிர்வரும் காலத்தில் விலை குறைவடையும் என எதிர்பார்க்க முடியாது. விலைகள் மேலும் உயர்வடையக்கூடும்."

இதேவேளை, முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு சுமார் 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

முட்டையொன்றின் உற்பத்திச் செலவு 30 ரூபாவிற்கும் 32 ரூபாவிற்கும் இடையில் காணப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில் பண்ணைகளிலிருந்து முட்டைகள் விநியோகிக்கப்படுவதும் அதே விலையிலேயே என்பதால் உற்பத்தியாளர்களுக்கு லாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், பண்டிகைக் காலத்தில் சந்தைக்குத் தேவையான முட்டை மற்றும் கோழி இறைச்சியை எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித் குணசேகர மேலதிகமாகத் தெரிவித்தார்.

அத்துடன், நவம்பர் 15 ஆம் திகதிக்குப் பின்னர் பண்டிகைக் காலம் ஆரம்பமாவதனுடன் இந்நிலைமை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அச் சங்கம் தெரிவிக்கிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அஜித் குணசேகர,

"இன்றைய நிலையில் நுகர்வோரின் கொள்வனவு சக்தி குறைவடைந்துள்ளது. நாம் சந்தையில் ஆய்வொன்றை மேற்கூறும் போது முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு குறைவடைந்துள்ளமை தெரியவருகிறது. சந்தையில் நுகர்வு சுமார் 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதை எம்மால் காண முடிகிறது. முட்டையொன்றின் உற்பத்திச் செலவு பொதுவாக 30 ரூபாவிற்கும் 32 ரூபாவிற்கும் இடைப்பட்டதாக அமைகிறது. எனினும் இன்று பண்ணைகளிலிருந்து முட்டைகள் விநியோகிக்கப்படுவதும் 30 ரூபாவிற்கும் 32 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையிலேயாகும். அதனால் உற்பத்தியாளர்களுக்கு லாபகரமான நிலைமை இல்லை. அதேபோன்று கோழி இறைச்சி விலையும் குறைவடைந்துள்ளது. நிலவும் பொருளாதார நிலைமையுடன் கோழி இறைச்சி நுகர்வு குறைவடைந்துள்ளதாகவே எமக்குத் தோன்றுகிறது. எனினும் உற்பத்தி தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வருகிறது. பண்டிகைக் காலத்தில் சந்தைக்குத் தேவையான விநியோகத்தைத் தடையின்றி வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம். அதனால் நவம்பர் 15 ஆம் திகதிக்குப் பின்னர் பண்டிகைக் காலம் ஆரம்பமாவதனுடன் நிலைமை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என நாம் எதிர்பார்க்கிறோம்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...