95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
லங்கா IOC நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை உயர்த்தியிருந்த நிலையில், அதற்கு இணையாக சயினொபெக் நிறுவனமும் தனது விலையைச் திருத்தியமைத்துள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
லங்கா இந்தியன் ஒயில் (IOC) நிறுவனத்தினால் ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் IOC நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 495.00 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இவ் விலை திருத்தமானது இன்று நள்ளிரவு முதல் IOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகச் செயற்படுத்தப்படுகின்றது.
லங்கா IOC ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் முன்னர் நிலவிய விலை 475 ரூபாவாக இருந்தது.
இதற்கமைய விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


