Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
கட்டுரைகள்

கிழக்கில் படுகொலையான தமிழர்கள் நினைவுகூரல்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2024 • 2:40 AM

கிழக்கில் படுகொலையான தமிழர்கள் நினைவுகூரல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் கிராம மக்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.
  • கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அம்பாறை திராய்க்கேணி, முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • ஓகஸ்ட் 1990 அன்று காலை அரச படையினரின் ஆதரவைப் பெற்ற கும்பல் ஒன்று திராய்க்கேணி கிராமத்திற்குள் புகுந்து சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 54 பேரை வெட்டிக் கொலை செய்தது.
  • அதற்கு முன்தினம் அலிமன்காடு பகுதியில் நெல் வயல் ஒன்றில் விவசாயிகள் சிலர் கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

34 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் கிராம மக்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அம்பாறை திராய்க்கேணி, முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
6 ஓகஸ்ட் 1990 அன்று காலை அரச படையினரின் ஆதரவைப் பெற்ற கும்பல் ஒன்று திராய்க்கேணி கிராமத்திற்குள் புகுந்து சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 54 பேரை வெட்டிக் கொலை செய்தது.
 
அரசாங்கப் படைகளின் உதவியுடன் பிள்ளையார் ஆலயத்திற்குள் நுழைந்த கொலையாளிகள் தங்கள் உறவினர்களைக் கொன்றதுடன் ஆலயத்தையும் சேதப்படுத்தியதாக தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் கூறுகின்றனர்.
 
அதற்கு முன்தினம் அலிமன்காடு பகுதியில் நெல் வயல் ஒன்றில் விவசாயிகள் சிலர் கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
 
1954ஆம் ஆண்டு பாலமுனை, ஒலுவில், மீனோடைகட்டு, அட்டாளைச்சேனை ஆகிய நிலமற்ற தமிழ் மற்றும் முஸ்லிம் கிராம மக்களுக்கு 300 ஏக்கர் செழிப்பான தென்னந்தோப்பை ஒரு ஏக்கர் 200 ரூபாய்க்கு பெயரளவில் கொள்வனவு செய்து, திராய்க்கேணி கிராமம் உருவாக்கப்பட்டது.
 
போரினால் பாதிக்கப்பட்ட திராய்க்கேணி கிராம மக்கள் இன்றும் இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கொல்லப்பட்ட அவர்களது உறவினர்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தி கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே கொலையுண்டவர்களின்
உறவினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
xfget6
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...