Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
கட்டுரைகள்

இந்தியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் நிலையில்

T

The Leader Desk

டிசம்பர் 26, 2022 • 7:03 AM

இந்தியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் நிலையில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
  • இந்த சம்பவங்களால் இந்திய - சீன உறவுகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
  • லடாக்கில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் நடந்த 17- வது சுற்று பேச்சுவார்த்தையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
  • '2022-ல் சர்வதேச நிலவரம் மற்றும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள்' என்ற தலைப்பில் பீஜிங்கில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதைத்தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்ட படைகளை விலக்குவது தொடர்பாகவும், அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் அடங்குவதற்குள் அருணாசல பிரதேசத்தில் இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் அந்த நாடு வாலாட்டியது. அங்குள்ள தவாங் செக்டரில் எல்லை தாண்டிய சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.

இந்த மோதலிலும் இரு தரப்பிலும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது சர்வதேச அரங்கில் மீண்டும் அதிர்வலைகளை கிளப்பியது.

இந்த சம்பவங்களால் இந்திய - சீன உறவுகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

லடாக்கில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் நடந்த 17- வது சுற்று பேச்சுவார்த்தையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இவ்வாறு இந்தியா-சீனா உறவுகளில் சலசலப்பு நீடித்து வரும் நிலையில், இரு தரப்பு உறவுகளின் உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என சீனா அறிவித்துள்ளது.

'2022-ல் சர்வதேச நிலவரம் மற்றும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள்' என்ற தலைப்பில் பீஜிங்கில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இந்தியாவும், சீனாவும் ராணுவம் மற்றும் தூதரகங்கள் வழியாக தொடர்பை வைத்திருக்கின்றன.

எல்லைப்பகுதிகளில் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இரு தரப்பும் உறுதிப்பாட்டுடன் உள்ளன.

இந்நிலையில், சீனா இந்தியா உறவுகளின் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...