Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
கட்டுரைகள்

ஜே.வி.பியின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஜனாதிபதி வேட்பாளராக கரு!

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2019 • 5:13 PM

ஜே.வி.பியின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஜனாதிபதி வேட்பாளராக கரு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னணியின் ஜனாதிபதி வேட்பாரளர் நியமனத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்க தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தனது பிரதிநிதியின் ஊடாக கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.
  • ஜே.வி.பியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை அந்த தொலைபேசி அழைப்பின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்வதற்காக அநுர குமார திசாநாயக்காவை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு நாம் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
  • பிரதமருக்கு மிக நெருக்கமானவரான திணேஷ் வீரக்கொடியே இவ்வாறு இந்தச் செய்தியை சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

முன்னணியின் ஜனாதிபதி வேட்பாரளர் நியமனத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்க தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தனது பிரதிநிதியின் ஊடாக கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

பிரதமருக்கு மிக நெருக்கமானவரான திணேஷ் வீரக்கொடியே இவ்வாறு இந்தச் செய்தியை சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து  தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் நிபந்தனை ஒன்றையும் முன்வைத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதானால் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி பொது வேட்பாளராகவே போட்டியிட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். இந்த நிபந்தனைக்கு இணங்கியுள்ள கரு ஜயசூரிய,  திணேஷ் வீரக்கொடி முன்னிலையிலேயே  ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்காவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு உடனடியாக அவரைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும், இந்நாட்களில் கொழும்புக்கு வெளியில் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.வி.பியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

அந்த தொலைபேசி அழைப்பின் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்வதற்காக அநுர குமார திசாநாயக்காவை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு நாம் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.  எவ்வாறாயினும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் இது  தொடர்பில் கேட்டபோது, சபாநாயகர் கரு ஜயசூரிய பல தடவைகள் தமது கட்சியின் தலைவருக்கு தொலை பேசி அழைப்பை மேற்கொண்டிருந்ததாகவும், எனினும் அதனைவிட மேலதிகமாக எதுவும் தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்.


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கரு ஜயசூரியவிடம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் நாம் கேட்ட போது, ஐக்கிய தேசிய கட்சியுடன் எந்த வகையிலான தொடர்புகளுக்கு ஜே.வி.பி தயாராக இல்லை என அந்த சிரேஷ்ட உறுப்பினர் உறுதியாகவே தெரிவித்தார்.

ஜாதிக ஜனபலவேக ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்கா இம்முறை கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்றும்  இது தொடர்பில் எந்த சந்தேகங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...