Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
கட்டுரைகள்

‘எங்களை அடிக்க வேண்டாம்; சுட்டு விடுங்கள்’ - ராணுவ தேடுதல்வேட்டையில் வன்முறை என காஷ்மீர் மக்கள் குற்றச்சாட்டு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 30, 2019 • 3:57 PM

‘எங்களை அடிக்க வேண்டாம்; சுட்டு விடுங்கள்’ - ராணுவ தேடுதல்வேட்டையில் வன்முறை என காஷ்மீர் மக்கள் குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிபிசியால் அதிகாரிகளிடம் உறுதி செய்யமுடியவில்லை.
  • காஷ்மீரின் ஒரு பகுதியை நிர்வகிக்கும் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.370-வது சட்டப்பிரிவை நீக்கும் அரசின் முடிவை இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் வரவேற்றுள்ளனர்.
  • பிரதமர் நரேந்திர மோதியின் தைரியமான இந்த முடிவை அவர்கள் பாராட்டுகின்றனர்.
எழுத்து அளவு:

போன்றவற்றை பாதுகாப்பு படையினர் நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து கேட்டறிந்த பிபிசியிடம், தாங்கள் லத்திகள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்டதாகவும், தங்களுக்கு மின்சார அதிர்ச்சி தரப்பட்டதாகவும் பல கிராமவாசிகள் தெரிவித்தனர்.பல கிராமங்களில் மக்கள் தங்களின் காயங்களை என்னிடம் காட்டினார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிபிசியால் அதிகாரிகளிடம் உறுதி செய்யமுடியவில்லை.

இந்த குற்றச்சாட்டுகளை ''ஆதாரமற்றவை மற்றும் மெய்ப்பிக்கப்படாதவை'' என்று இந்திய ராணுவம் கூறுகிறது.கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை திரும்பப்பெரும் முடிவை அரசு எடுத்தபிறகு, மூன்று வாரங்களுக்கு மேலாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கும் கட்டுப்பாடுகள் காஷ்மீரை முடக்கியுள்ளது.இந்த பிராந்தியத்தில் பல ஆயிரக்கணக்காண கூடுதல் துருப்புகள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

 

மேலும் அரசியல் தலைவர்கள், வணிகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டும், வீட்டுக்காவலிலும் உள்ளனர்.இதில் பலர் மாநிலத்துக்கு வெளியேயுள்ள மற்ற சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கைளை காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் தற்போது கூட்டாட்சிக்கு கீழ் வரும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இங்கு நிலவும் பிரிவினைவாத கிளர்ச்சிக்கு எதிராக இந்திய ராணுவம் போராடி வருகிறது.இந்த பிராந்தியத்தில் தீவிரவாதிகளை ஆதரிப்பதன் மூலம் பாகிஸ்தான் வன்முறையை தூண்டுவிடுவதாக இந்தியா குற்றஞ்சாட்டிவருகிறது.

காஷ்மீரின் ஒரு பகுதியை நிர்வகிக்கும் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.370-வது சட்டப்பிரிவை நீக்கும் அரசின் முடிவை இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் வரவேற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதியின் தைரியமான இந்த முடிவை அவர்கள் பாராட்டுகின்றனர். நாட்டில் உள்ள பிரதான ஊடகங்கள் அரசின் இந்த முடிவை பரவலாக ஆதரித்துள்ளன.(நன்றி பிபிஸி)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...