சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த த சில்வாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

சீன அரசை விமர்சித்த பிரபல தொழிலதிபர் ஜாக்மாவின் (Jack Ma) அலிபாபாவின் பங்குகள் அதிகமான சரிவைச் சந்தித்துள்ளதாக பிரபல நாளிதழான புளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி அவர்கள் உட்பட சிலர் கூறியுள்ள சில விடயங்களுக்கு எதிராக அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நாயகம் சுரேஷ் சலே நேற்று (25) குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரை தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசியின் வாயிலாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் மிரட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்திய கடற்படையின் 6 பயிற்சிக் கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்காக இலங்கை வந்தடைந்தன.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு பாடசாலை சீருடையோ அல்லது வேறு வசதியான. இலகுவான மற்றும் பொருத்தமான உடை மற்றும் காலணி அணிந்து வர முடியுமென கல்வி அமைச்சு கூறுகிறது.

அக்கரைப்பற்று விவசாயிகள் இரசாயன உரம் கோரியும் தாம் எதிநோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு வேண்டியும் கண்டன போராட்டமொன்றை அண்மையில், அக்கரைப்பற்று கல்லோயா வலது கரை வாய்க்கால் வதிவிட திட்ட முகாமையாளர் காரியாலய முன்றலில் நடாத்தினர்.

நாளை தேர்தல் நடந்தால், தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதி எடுக்காத முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ளார்.

கேரளாவைத் தொடர்ந்து மலைப்பிரதேச மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டிலும் கனமழையும், நிலச்சரிவும் ஏற்பட்டது.  நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் போராட்டங்களில் ஒன்று கனடாவில் (அக்.23) இடம்பெற்றது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி