அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரை தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசியின் வாயிலாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் மிரட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மாஅதிபர், தேசபந்து தென்னகோன் தன்னை இவ்வாறு அச்சுறுத்தியதாக அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே வெளிப்படுத்துகிறார்.

கொழுமபு, தடுப்புக் காவல் சிறையிலிருந்து விசேட கடிதமொன்றின் மூலம் கூறுகையில், தன்னை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு மிரிஹானையில் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தலங்கம பொலிஸ{க்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ள அவர், தேசபந்து தென்னகோன் தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியில் அழைத்து அழைப்பை வசந்தவிடம் கொடுக்குமாறு கூறியதாகவும் கூறுகிறார். கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மிரட்டும் தொணியில் அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் கீழ்கண்டவாறு தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

‘ஒகஸ்ட் 06ம் திகதி அதிகாலையின் என்னைக் கைது செய்து தலங்கம பொலிஸ{க்கு அழைத்துச் சென்றனர். அங்கு வாக்குமூலம் வழங்கிக் கொண்டிக்கும் போது தொலைபேசியின் ஊடாக தேசபந்து தென்னகோன் தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதியோடு தொலைபேசியில் பேசினார். பின்னர் தொலைபேசி எனது கைக்கு தரப்பட்டது. அதில் பேசிய தேசபந்து தென்னகோன் ‘இம்முறை உங்களை விடப்போவதில்லை எல்லோருக்கும் ஒரு முடிவு கட்டுவேன், நீங்கள் கூடுதலாக ஆடுகிறீர்கள், கவனமாக இரு” என்று கூறினார். நான் இதனை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். தேசபந்து தென்னகோன் தொலைபேசி ஊடாக அப்படி மிரட்டினார். இதுதான் சிறி லங்கா ஜனநாயக சோஷலிஸ குடியரசின் பொலிஸ். ஆகவே, இந்த கைதுகள் தெளிவாக திட்டமிட்டு செய்த கைதுகள் என்பது உறுதி. இறுதியில், தேசபந்து தென்னகோன் செய்த மிரட்டலின் அர்த்தம் சிறைச்சாலையில் வைத்து தெரிய வந்தது”

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி