1200 x 80 DMirror

 
 

பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள போதும் பல முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.



இன்று மார்ச் 21ஆம் திகதி. சர்வகட்சி மாநாடு நடைபெற சரியாக இன்னும் ஒரு நாள் இருக்கின்றது. மைத்திரி குறிப்பிடுவது இந்த சந்தர்ப்பத்தில் நாடு எதிர்நோக்கி இருக்கக் கூடிய மிக கடுமையான நெருக்கடிக்கு அனைத்து கட்சிகளும் வருகை தந்து தங்களுடைய முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் என்று. உண்மையில் மைத்திரி அந்த விடயத்தைக் குறிப்பிடுவது மிகவும் உணர்வு பூர்வமானதாக அமையலாம். இருப்பினும் முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டியது ராஜபக்சக்கள் தானே .ரட்டே ரால மைத்திரியிடம் கேட்பது யார் இந்த ராஜபக்சக்களை நம்பிக்கை கொள்கிறார்கள்.


இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளினால் பாதிக்கப்படுவதாகவும் அதிலும் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று (22) நிறைவேற்றப்பட்டுள்ளமை உலகத்தை ஏமாற்றும் என என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சாடியுள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.

இந்தியா வழங்கவுள்ள ஒரு பில்லியன் டொலர் குறுகிய கால சலுகைக் கடனுக்கான உடன்படிக்கையில் புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் , இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டன.

இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

நாடுஎதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில், இவ்வாறு இந்தியா இந்தளவு பாரிய உதவியை வழங்கி இருப்பது வரலாற்றில் முதல்தடவையாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

என்றாலும் இந்தியாவின் உதவி தொடர்பில் பல்வேறு கதைகள் தெரிவிக்கப்படுகின்றன. அதனால் வெளிவிவகார அமைச்சர் அல்லது நிதி அமைச்சர் இந்த உதவி கிடைத்ததன் பின்னணி தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை கோரியுள்ளார்.

இதனிடையே நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் மொட்டு கட்சி ஆதரவாளர்களுக்கு நிவாரணம் வழங்கி தேர்தல் ஒன்றுக்கு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது வெட்கப்படவேண்டிய செயல் எனவும் தெரிவித்தார்.

அதனால் இந்திய அரசாங்கம் வழங்கி இருக்கும் கடன் தொகை மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்துவேலைத்திட்டங்களின் அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பிரேரணை முன்வைத்துள்ள அவர், இந்தியாவின் கடன் தொகையின் மூலம் பட்டினியுடனும் தாகத்துடனும் வரிசையில் இருக்கும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய அரசு சீனாவுடன் பல தொடர்புகளை போணி வந்த நிலையில் இந்தியாவுக்கு அது தலைவலியை ஏற்படுத்தியிருந்தது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை பயன்படுத்தி கொண்டு இந்தியா தமக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்பதாகவே தற்போதைய காய் நகர்த்தல்கள் பார்க்கப்படுகின்றன. வேறு வழியின்றி தவிக்கும் ராஜபக்ஷ அரசு விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவிடம் தஞ்ஞம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தியாவின் உதவிகள் இல்லாவிட்டால் நாட்டு மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருக்கலாம். நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது இந்தியாவினால் வழங்கப்படும் இந்த உதவிகள் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதுபோல் நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெறுக்கடியை சமாளிக்க முடியாது மக்கள் திணறி வரும் நிலையில் வடக்கில் வாழும் மக்கள் இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.

ல்

கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் வெளியேற்றம் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டத்தை  நடத்த தீர்மானித்துள்ளது.இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பும் மலையகப் போராட்டம்  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி குறிப்பிட்ட கதையொன்று உள்ளது.

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி