நேற்று கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி குறிப்பிட்ட கதையொன்று உள்ளது.

மைத்திரி குறிப்பிட்டது  இன்று இந்த நாட்டில் நடைபெற்று இருக்கக்கூடிய அனைத்து அழிவுகளுக்கும் காரணமாக அமைந்திருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை என்று. அதனால் கட்டாயமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடும் அதுவாக இருக்கின்றது என்று குறிப்பிட்டார்நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியானது இந்நாட்டில் ஜேஆர்ரினால் ஸ்தாபிக்கப்பட்டது.

ஜேஆர் மூலம் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் ஊடாக. அதே போன்று ஜேஆர்தான் எமது நாட்டிற்கு திறந்த பொருளாதாரத்தை முறையைக் கொண்டுவந்தது. உண்மையில் அது திறந்த பொருளாதாரம் என்று குறிப்பிடுகின்ற பொருளாதாரமாக காணப்படவில்லை.

ரட்டே ரால அதற்கு எப்போதும் குறிப்பிட்டது குப்பை பொருளாதாரம். இன்று எங்களுடைய நாட்டினுடைய தேசிய உற்பத்தியை அழித்து வெளிநாட்டு குப்பைகள் இந்த நாட்டிற்கு கொண்டு வருவதற்கான வழியை ஏற்படுத்திய தரகு பொருளாதாரமே அதுவாகும்.

அதன்கீழ் வெளிநாடுகளில் இருந்து மூன்றாம் மட்ட பொருட்கள் அல்லது சேவைகள் எங்களுடைய நாட்டுக்குள் வந்தது. எவ்வாறு இருப்பினும் அன்று செய்த இந்த அறிவு இரண்டும் காரணமாக இன்று நாங்கள் அதனுடைய பாதகங்களை நல்ல முறையில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

43 வருடங்களுக்குப் பின்னர் அந்த பிரதிபலன் உயர்ந்த பட்சமாக காணப்படுகின்றது. நாளைய தினமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். அன்று ஜேஆர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாட்டினுடைய மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

அந்த எதிர்ப்பில் முன்னே ஜேவிபி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இருந்தது. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களும் ஜேஆர்ரன் 78 யாப்புக்கு ம எதிர்ப்பு தெரிவித்து பாதைக்கு இறங்கினார்கள்.

விஷேடமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக. அன்று மொட்டு போன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருக்கக்கூடிய சிரேஷ்ட்மான தலைவர்களும் அன்று ஸ்ரீமாவோடு இருந்தனர். மஹிந்த மைத்திரியும் அதிலிருந்தனர்.  அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்காக முன்நின்றது ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே.

அதற்குப் பின்னர் இந்த நாட்டினுடைய கடந்த ஜனாதிபதித் தேர்தலை விடுத்து ஏனைய அனைத்து ஜனாதிபதி தேர்தலில் பிரதான விடயமாக இருந்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற விடயம் ஆகும்.சந்திரிக்கா வந்ததும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து திறந்த பொருளாதாரத்தை மனிதாபிமான ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவது என்ற அடிப்படையிலேயே.

சந்திரிக்கா அன்று ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் நிஹால் கலப்பத்திக்கு எழுத்து மூலமாக ஒரு உறுதிமொழியை வழங்கினார் சந்திரிகா ஜனாதிபதியாக பதவி தந்து சரியாக ஒரு வருடத்திற்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று.

சந்திரிக்கா ஜனாதிபதியாக வந்தது இன்று இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்னர் ஆகும். இன்று சந்திரிகா ஜனாதிபதியாக இல்லாவிட்டாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உள்ளது.அதன்பின்னர் வருகைதந்த மஹிந்த அதனையே செய்தார்.

அவர் வந்ததும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று. அவ்வாறு வந்த மஹிந்த வெட்கமில்லாமல் 18வது திருத்தத்தை கொண்டு வந்து சாகும்வரை நிறைவேற்று ஜனாதிபதியாக இருப்பதற்கான எல்லா வகையான விடயங்களையும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு அதிகாரத்தை பெற்ற மைத்திரியும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வேன் என்று குறிப்பிட்டிருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை ஒழிக்கவில்லையாயினும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் இருக்கக்கூடிய அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தாது  நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினார்.சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தினார்.

அதற்கு ஒத்துழைப்பு வழங்கியது இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியாகும். சொல்லப்போனால் அதிகம் சரியாக நடைபெறவில்லை. நிறைவேற்றை இல்லாமல் செய்வதற்கு பதிலாக வெளியில் வந்தது 19 ஆவது திருத்தம். குறைபாடுகள் பல அதில் காணப்பட்டது. அதற்கு அழுத்தம் செலுத்தக் கூடியதாக இருந்தது மைத்திரி மற்றும் ரணில் இடையே ஏற்பட்ட அதிகாரம் தொடர்பான முரண்பாடு ஆகும்.

அதனால் நடைபெற்றது வலுவான 19 உருவாகுவதற்கு பதிலாக 19 திருத்தம் பிறழ்வுக்கு உட்படுத்தப்பட்டதாகும்.  பிரதமருடைய அதிகாரம் ஜனாதிபதி அதிகாரத்தைக் இடையே தேவையற்ற முரண்பாடுகள் ஏற்பட்டு நல்லாட்சி இறுதிக்கட்டத்தில் பிளவுபட்டது. அதற்கு ரணிலைப்போன்று மைத்திரியும் பொறுப்புக்கூற வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி கதிர்காம மாநாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அப்போது எடுத்திருந்தது.

இருப்பினும் இன்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நிலவரம் அதுதானா என்று தெளிவாக இல்லை. எவ்வாறாயினும் அன்று ஜேவிபி,ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. உண்மையில் அன்று அந்த நிலைப்பாட்டில் இல்லாமல் இருந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஜாதிக ஹெல உறுமய மாத்திரமே.

அன்று நிறைவேற்றை ஒழிக்க இருந்த பொன்னான சந்தர்ப்பம் கைவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதிக்கு பொறுப்பு சொல்ல மைத்திரிக்கும் வகிபாகம் இருக்கின்றது. அதனை சரிசெய்து கொள்வது மைத்ரியின்  பொறுப்பாகும்.2019ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 20ஐ கொண்டு வந்து ஜேஆர்ரையும் பார்க்க அதிகமான அதிகாரத்தை தம்மைச் சூழவகொண்டு வந்தார். உண்மையில் இன்று அந்த அதிகாரம் ஒரு முட்டாள்தனமான காணப்படுகின்றது. இன்று அந்த அதிகாரம் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தக்கூடியதாக காணப்படவில்லை.

இருக்கக்கூடிய ஒரே ஒரு விடயம் அந்த பிரச்சினைகளுக்கு விடை தேடி அலைகின்ற மக்களை மக்களை அழிப்பதாகும். அதனை விடுத்து  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு தற்போது  செய்யக் கூடியதாக இருப்பது ஒன்றுமே இல்லை. அதனால் மைத்திரி குறிப்பிட்டது போன்று கட்டாயமாக தனி ஒரு நபருக்கு எதேச்சதிகாரம் செல்லவதனை ஒழிக்க வேண்டும். அது ஜனநாயகத்தின் அடிப்படைக்கு எதிரானதாக காணப்படுகின்றது.

அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஒழிக்க வேண்டும் என்று இந்த சமூகத்தில் இருந்த அந்தக் கருத்தை இன்றைய அரசியல் தலைவர்களால் மிக மோசமான  நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உண்மையில் அது ஒரு ஆக்ரோசமான  முட்டாள்தன்மையுடைய விடயமாகும்.அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கின்ற போராட்டத்தில் முன்னிலையில் இருந்தது ஜேவிபி என்று ரட்டே ரால குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் தற்போதைய தலைவர் அனுரகுமார திசாநாயக்க நினைத்திருப்பது இன்று இருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று கதிரையில் அமர்வதற்கே.அதற்குறிய ஆடையை தற்பொழுது தைத்துவிட்டார். ஜனாதிபதி கதிரையில் இருந்து கொண்டு எதிர்பார்ப்பது ஜேவிபி எதிரிகளுக்கு எதிராக வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று. உண்மையில் அனுரவை நிறைவேற்று அதிகார கதிரையில் அமர்த்துவது என்பது கம்போடியாவிலிருந்து  பொல்போட்டை கொண்டு வந்தது போன்ற ஒன்றாகும்.

அடுத்ததாக அஜித் உண்மையில் நிறைவேற்று அதிகார தன்மையில் இருக்கின்றார்.அவரது ஒவ்வொரு வசனமும் எதிர்காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி என்ற அடிப்படையில் அமையப் பெற்றிருக்கின்றது. எல்லாவற்றுக்கும் முதன்மையாக இந்த குழுவினர் இரண்டிலும் இருக்கக்கூடிய இந்த ஆவேசத்தை தோல்வியடையச் செய்ய செய்ய வேண்டும்.

அதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான கருத்தாடலை உயர்நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதனால் அனுரக்களுக்கு வெட்கம் போகும் அளவுக்கு மேற்கொள்ள வேண்டும்.ரட்டே ரால இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு மனிதரும் அந்த கருத்தை உயர்நிலைக்கு கொண்டு வராத சந்தர்ப்பத்தில் அந்த கருத்தை உயர்த்தி இருந்தார்.

உண்மையில் தனியாக அவர் அதனை உயர்த்தி இருந்தார். இருப்பினும் தற்போது சந்தோசமாக இருக்கின்றது அதனை சமூகத்தில் முக்கியமான பேசுபொருளாக  மீண்டும் கொண்டுவரலாம். இருப்பினும் அந்த கருத்தை நிலைபெற செய்தால் மட்டும் போதுமானதாக இல்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதனை முற்றாக ஒழித்தல் வேண்டும். அதற்கான முன்னோடியாக கருவின் சமூக நீதிக்கான தேசிய இயக்கம்  முன்னின்று செயற்படுகிறது. தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அந்த இடத்திற்கு வருகை தந்துள்ளது.

தற்போது  நிறைவேற்று ஜனாதிபதி என்ற அந்த ஆடையை அணிந்துள்ள அனுரவும் சஜித்தும் குறிப்பிடவேண்டும் நிறைவேற்று ஜனாதிபதியை வைத்திருக்க தேவையான  நியாயமான காரணங்களை குறிப்பிட வேண்டும். மைத்திரிக்கு பதில் வழங்க வேண்டும்.

ஏனென்றால் அந்த பிரச்சினையை கேட்கக்கூடிய பூரண உரிமை மைத்ரிக்கு இருக்கின்றது. குறைபாடுகளுடன் சரி இந்த எதேச்சதிகார நிறைவேற் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து இலங்கையினுடைய ஒரே ஒரு ஜனாதிபதி மைத்ரி என்ற விடயத்தை குறிப்பிட வேண்டும்.அதனால் ரட்டே ரால நேற்று மைத்திரி குறிப்பிட்டு அந்த கருத்துக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தன்னுடைய பூரண ஒத்துழைப்பை தெரிவிக்கின்றார்.

இருப்பினும் நிறைவேற்றை ஒழிக்கக் கூடியதாக இருப்பது இன்னுமொரு நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்து  எந்த பிரயோசனமும் கிடையாது. அதனை ஒருபோதும் அவருக்கு செய்ய முடியாது. அதனை செய்யக் கூடியதாக இருப்பது பாராளுமன்றத்திற்கு. அதனை நிறைவேற்றுகின்ற அந்த விடயத்தில் மக்கள் ஆணையை ஏற்படுத்த வேண்டும் பாராளுமன்றத்தில்.

அவசியமாக இருந்தால் இந்த பாராளுமன்றத்தில் அதனை செய்யக்கூடியதாக உள்ளது. இருப்பினும் இவ்வளவு புத்தி கூர்மை உடையவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என்று ரட்டே ரால ஒருபோதும்  நினைக்கவில்லை.

ஏனென்றால் 19க்கு கையை உயர்த்தி அவர்கள் 20க்கும் கையை உயர்த்தி வெட்கமில்லாமல் இருந்து கொண்டிருப்பதுதே குறிப்பிடக்கூடிய விடயம்.

அவ்வாறாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை

வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு

ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி