8ஆவது நாளாக தொடரும் வடக்கு சுகாதார தொண்டர்கள் போராட்டம்!
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் தொடர்ந்து 8ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்றையதினம் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.