நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபாய ராஜபக்ஷ விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உடன்பாடுகள் எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல்கள் பல நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதெவேளை, புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.டபிள்யூ.குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி