ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 5ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தம்மீது சுமத்தப்பட்ட

குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் முன்வைத்த 4 பிரதான குற்றச்சாட்டுகளை மேற்கோள்காட்டி, இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ, பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு என்னிடம் கையளிக்கப்பட்ட மறுநாள் நான் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை தொடர்புகொண்டேன் என கர்தினால் தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்   கர்தினாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவேயில்லை என கோட்டாபய தெரிவித்துள்ளார்.

 

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி