சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு டீசல் தொகையொன்றை விற்பனை செய்ய முற்பட்ட எரிபொருள் பௌசர் சாரதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில் பயிர் செய்தற்காக வழங்கப்பட்டிருந்த விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார தெரிவித்தனர்.

அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபாரங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருந்தால், அந்த வாகனங்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் QR குறியீட்டில் எரிபொருளை பெற பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இன்றைய தினம்(02) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு , இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை, ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி