காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக வௌியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஒன்றிணையுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பகிரங்க அழைப்பு விடுத்தார். 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொள்ளுப்பிட்டியவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

னாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலையால், இதுவரையில் 9 மாவட்டங்களில், 3037 குடும்பங்களைச் சேர்ந்த 12, 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூவர் உயிரிழந்ததுடன், நால்வர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 485 குடும்பங்களைச் சேர்ந்த 2374 பேர், 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  சீரற்ற காலநிலையினால், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹற்றன் – கொழும்பு மற்றும் ஹற்றன் – கண்டி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பார்.

சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு டீசல் தொகையொன்றை விற்பனை செய்ய முற்பட்ட எரிபொருள் பௌசர் சாரதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி