2021 - 2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நெல்லைக் கொள்வனவு செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நிதிப் பற்றாக்குறை கிடையாது என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், உணவு வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (03) முதல் அமுலுக்கு வரும் வகையில், கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் பராட்டா, ரொட்டி மற்றும் ரோல்ஸ் ஆகியவற்றின் விலைகள் 10 முதல் 15 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி