2021 - 2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

2021-2022 கல்வியாண்டிற்காக 42 ஆயிரத்து 519 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மாணவர் கைநூல் தற்போது நூல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட விற்பனை முகவர்களின் பெயர் பட்டியல் மும்மொழிகளிலும் இன்றைய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இதற்காக பல்கலைக்கழக இணையத்தளத்தைப் பயன்படுத்த முடியும்.

ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் 1919 அரசாங்க தகவல் கேந்திரத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் இந்த அதிகாரிகளுக்கு இது தொடர்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி