இலங்கை விமானக்கூட்டுதாபானத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் கபில சந்தசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேனாயக்கவின் வங்கிக்கணக்கிலிருந்து 8 இலசம் டொலர் செபர் பியத் கோல்டிங் நிறுவனத்தின் அதிகாரி நிமால் பெரேராவின் பெயருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று (19) கோட்டே நீதிமன்ற விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

பிரபல சிங்கள நடிகர் காவிங்க பெரேரா இன்று அதிகாலை 12.45 மணியளவில் தலங்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று கண்டி நகரில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களால் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியக்காரர்கள் புதிய ஆண்டில் தமது ஓய்வூதியதொகையை அதிகரிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்நெடுத்தனர்.

மிக் விமான கொல்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அமெரிக்கன் டொலர் பில்லியன் 7.833 ரூபாவாகும். இது சம்பந்தமாக விசாரணை நடாத்தும் பொருட்டு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இந்த விமானக் கொள்வனவு விடயம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

புறக்கோட்டை மெனிங் சந்தையிலும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குருநாகல் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சரத் வீரபண்டார எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இத்தேர்தலுக்கு அவரை வைத்தியசாலையின் நிர்வாககுழு பெயரிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீன மருத்துவ அதிகாரிகள், 44,000 பேருக்கு அதிகமானோரின் தகவல்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசாவினால் வழிநடாத்தப்படவுள்ள சமகி ஜனபலவேகய என்ற அரசியல் கூட்டணியில் ஐ.தே கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனது மிகுதிகாலத்தை ஓய்வாகக் கழிக்கலாம் என எண்ணியிருந்தேன் ஆனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை அதனால் மீண்டும் நான் பொதுத்தேர்தலில் குதிக்க திட்டமிட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் நடவடிக்கையானது இலங்கை அரசுக்கு விழுந்த அடியாகும்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி