மிக் விமான கொல்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அமெரிக்கன் டொலர் பில்லியன் 7.833 ரூபாவாகும். இது சம்பந்தமாக விசாரணை நடாத்தும் பொருட்டு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இந்த விமானக் கொள்வனவு விடயம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

முன்னாள் ரஷ்யாவுக்கும்,உக்றேனுக்குமான இலங்கைத்தூதுவர்  உதயங்க வீரதுங்கவே இந்த விமான கொள்வனவில் ஈடுபட்டிருந்தார்.

சிரேஸ்ட போலிஸ் அதிகாரி பி. தயாரத்ன மற்றும் நிகால் பென்சிஸ் ஆகிய  இருவர் முன்நிலையிலும் இந்த விடயம் முறைப்பாட்டிற்கு எடுக்கப்பட்டது.

நீதி மன்ற விசாரணை கோட்டே நீதிபதி ரங்கன் திசானாயக்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் யார் என்பது குறித்தும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நளின் த திசாநாயக்க சமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர்.  இது விடயம் சம்பந்தமாக கடந்த  5 வருடங்களாக விசாரணை நடத்திய  CID இனர் இதை மறந்து விட்டார்களா? புதிய அதிகாரிகள் வந்து ஒன்றும் தெரியாது என்று சொல்கின்றார்கள். அவர்கள் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள விசாரணை எப்படிப்பட்டது. அந்த அதிகாரிகள் பசிலுடன் கதைத்தது தெரியாது. இதை வைத்து பார்க்கும்போது CID யினர் குழந்தையாகி விட்டார்களா? இல்லை குழந்தையாக்கப்பட்டுள்ளார்களா? என்பது தெரிய வர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் த ஜயதிஸ்ஸ அவரது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்                       

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி