ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2024 இல் நிரந்தர அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐ.தே.க தெரிவித்துள்ளது. முன்னாள் உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2024 இல் அரசாங்கத்தை கையகப்படுத்த எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியில் வலிமை கொண்ட குழுவினருடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

பலபிட்டி மற்றும் அம்பலாங்கொட ஐ.தே.க ஆதரவாளர்களுக்கு மத்தியில்  உரையாற்றிய  அபேவர்தன இப்போதைக்கு அரசாங்கத்தை கையகப்படுத்தும் திட்டங்களை முழுமையாக வெளியிட முடியாது என்றும் அது விரைவில் வௌியிப்படும் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில்  ஏமாற்றமடைந்துள்ள அரசாங்க அமைச்சர்கள் 2024 இல் புதிய அரசாங்கத்தை அமைக்க கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை வலுப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு அந்த அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தை அமைப்பதற்காக 12,000 வாக்குச் சாவடிகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான புதிய  திட்டத்தை செயல்படுத்த ஐ.தே.க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி