ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கவனிப்புக்காக நிறுவப்பட்ட மையங்களின் நிர்வாகத்திற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடுவதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

கொழும்பு, டேம் வீதியில் பயண பெட்டிக்குள் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான புத்தல பொலிஸ் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இம்முறை அவர்கள் அரசாங்கத்தை உடைக்கும் வரை காத்திருக்க மாட்டோம் அதற்கு முன் அவர்களை அடித்து துரத்துவோம் என சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கூறியதாக  ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க கூறிய கருத்து  விமல்-பசில் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் இணங்காணப்பட்ட இடமொன்றில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் உள்ளிட்ட குழு நடத்தியது இருந்தது ஆனால் இத்தாக்குதல் யாருடைய தேவைக்காக நடத்தப்பட்டது என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பி​ப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் ரகசியத்தை மறைக்க அரசாங்கத்திற்கு தெளிவான நோக்கம் ஒன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் அதிபர் நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ஜெனரல் ஹரிகுப்தா ரோஹனதீர நேற்று (01) கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் அவரை சந்தித்த போது அவரால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை ​வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை லங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது. என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி