உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் உள்ளிட்ட குழு நடத்தியது இருந்தது ஆனால் இத்தாக்குதல் யாருடைய தேவைக்காக நடத்தப்பட்டது என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பி​ப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் ரகசியத்தை மறைக்க அரசாங்கத்திற்கு தெளிவான நோக்கம் ஒன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சி.ஐ.டி தலைவர் ரவி செனவிரத்னவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் குறித்து ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அறிக்கை வழங்கப்பட்ட போதிலும், அதில் எதுவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவி்த்துள்ளார்.

 அவர்'Leader UNCUT' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

"முன்னாள் ஜனாதிபதி உட்பட ஒரு குழு மட்டுமே தாக்குதலைத் தடுக்க தவறிவிட்டதாக ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சக்திகளைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சஹ்ரானின் மனைவி கூறியது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற சாராவை ஆணைக்குழுவுக்கு அழைத்து வந்து விசாரணை நட​த்தவில்லை. எல்லா ரகசியங்களையும் அறிந்த சாராவை அழைத்து வருவதில் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை அரசாங்கம் மறைக்கிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு பொய், ”என்றார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி