இலங்கையில் அரச சேவையில் புதிதாக இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான பெண் பணியாளர்களின்  மகப்பேறு விடுமுறையை  பாதியாகக் குறைப்பதற்கான, இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மீண்டும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 12வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறை,இன,மத ரீதியாக குழப்பங்களை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எவரையும் விசாரணையின்றி புணர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப அங்கீகரிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு தூக்கி எறியப்படுகிறது.கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுத்தியது.

கடந்த மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது சிறிய குளங்களில் தற்போது நீர் நிரம்பியுள்ள நிலையில், தற்போது அக்குள்ள குளங்களில்  முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 11வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையில் போரின் கடைசி காலப்பகுதியில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை சர்வதேச ஆய்வின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் யூ.என்.ஆர்.சி. (ITJP) இலங்கையின் இறுதி யுத்தத்தின் மனித அழிவைப் பற்றிய உண்மையை வௌியிடுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதுடன் ஒரு சர்வதேச விசாரணையை  அரசாங்கம் நடத்தத் தவறிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்மாந்துறை தனியார்வங்கி( HNB)கிளையின் உதவிமுகாமையாளருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து கிளை நேற்று(12) வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், நாட்டின் தென்பகுதியின் பல இடங்களில் பொலிஸ் சித்திரவதை தொடர்பான 13 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, சித்திரவதைக்கு எதிரான இலங்கை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி