இலங்கையின் தென்பகுதியில்  ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் கடத்தல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Feature

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர், இன்று(16)  மாலை 06 மணியளவில் கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து கைது  செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Feature

இம்முறை இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகக் கற்கைத்துறையில் தங்கப்பதக்கம் பெற்று மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாத்தளை சுதுகங்கை தோட்டத்தைச் சேர்ந்த மு.துலாபரணி.

Feature

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Feature

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வௌியிடுவதை தடுக்கும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Feature

சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ண இதனைத் தெரிவித்துள்ளார்.

Feature

தலைமன்னாரில் ரயில் ஒன்றுடன், தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.9 வயது மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து வைத்த இரண்டு அருட்தந்தையர்களை தேடி இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பொலீசார் மீண்டும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து விசாரித்துச் சென்றுள்ளனர்.
Feature

புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி