எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசாவினால் வழிநடாத்தப்படவுள்ள சமகி ஜனபலவேகய என்ற அரசியல் கூட்டணியில் ஐ.தே கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனது மிகுதிகாலத்தை ஓய்வாகக் கழிக்கலாம் என எண்ணியிருந்தேன் ஆனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை அதனால் மீண்டும் நான் பொதுத்தேர்தலில் குதிக்க திட்டமிட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் நடவடிக்கையானது இலங்கை அரசுக்கு விழுந்த அடியாகும்.

எமது நாட்டின் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட உள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிய முன்வர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற தவறியுள்ளமையால் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உள்ளோம் இது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என்று சி. வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (17) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபரொருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் பலப்பிட்டிய வெலிதுவகொடை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,ஸ்ரீலங்கா நிதகஸ் பக்ஷய ஆகிய கட்சிகளுக்கிடையிலான சந்திப்பில் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (14)     அதிகாலை நாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் கிடைக்கின்றது.பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளரான கரு ஜயசூரியவை நியமித்து அன்னச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ரணில் அணியினர் சஜித் அணியினருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன்படி 110 - 120 விற்கு விற்ற போலந்து நாட்டு பெரிய வெங்காயம் 190 - 200      ரூபா வரை விலை உயர்ந்துள்ளது. 110 - 120 ரூபாவிற்கு விற்ற பாகிஸ்தான் நாட்டு பெரிய வெங்காயம் 230 ரூபாவாக விலை உயர்ந்துள்ளது.  120 ரூபா விற்ற எகிப்து நாட்டு பெரிய வெங்காயம் 190 ரூபா வரை விலை உயர்ந்துள்ளது.

இது சம்பந்தமாக வியாபாரிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பில் பெரிய வெங்காயத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி