உக்ரைனில் வேலை தருவதாக கூறி ஓய்வுபெற்ற பாதுகாப்பு

அதிகாரிகளை யுத்தத்துக்கு அனுப்பியவர்கள் குறித்து ஆராயுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை லிடுத்துள்ளார்.

சில முகவர்கள், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கான தொகையைப் பெற்றுக் கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி ரஷ்ய-உக்ரைன் போருக்கு கூலிப்படையாக அனுப்பியுள்ளனர்.

அவர்கள் யுத்தம் நடத்த செல்லவில்லை, வேலை தேடியே சென்றனர். ஆனால் அவர்கள் இப்போது யுத்த களத்தில் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (13) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதால், இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி