ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்க்ஷவை
நியமித்து, நிறைவேற்றுச் சபை எடுத்த தீர்மானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
விஜயதாச ராஜபக்க்ஷ, பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும், இந்த வழக்கைத் தவிர வேறு எந்த சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மே 27 ஆம் இடம்பெறவுள்ளது.